ரஹ்மானின் பாராட்டு விழா என்னாச்சு.
.?வாராது வந்த மாமணி போல் முதல் முறையிலேயே 2 ஆஸ்கார் விருதுகளைத் தட்டிக் கொண்டு வந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தமிழ்ச் சினிமாவுலகம் இன்னமும் முறைப்படியான பாராட்டுவிழா நடத்தவில்லை.இசையமைப்பாளர்கள் சங்கத்தினர் மட்டுமே தங்களது பிள்ளைக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி மகிழ்ந்திருக்கிறார்கள். மற்றபடி அரசுத் தரப்புக்கு இப்போதைக்கு இதில் ஆர்வமில்லையாம்.. விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்ற அமைச்சர் பரிதிக்கு ரஹ்மான் தரப்பில் இருந்து சரியான வரவேற்பும், மரியாதையும் கிடைக்கவில்லை என்கிறார்கள். இதோடு கூடவே தேர்தல் வேலைகள் நடப்பதாலும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.கலைஞரை அழைக்காமலோ, அல்லது அவரை விட்டுவிட்டோ எப்படி நிகழ்ச்சியை நடத்துவது என்று திரையுலகத் தலைகளுக்குக் குழப்பம். அவருக்கோ உடல் நிலை சரியில்லை என்பதாலும், விழா என்றால் 4 மணி நேரமாவது அவரை அமர வைத்திருக்க வேண்டுமே என்பதாலும் அக்கறை கொள்ளாமல் இருக்கிறார்கள். எப்படியும் கலைஞர் டிவிக்குத்தான் ஒளிபரப்பு உரிமை தரப்பட வேண்டி வரும். கலைஞர் இல்லாமல் எப்படி என்று யோசிக்கிறார்களாம் கலைஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள்.. ரஹ்மானும் கலைஞரை வீடு தேடிப் போய் இன்னமும் பார்க்கவில்லை என்பதும் பெரும் குற்றமாகக் கருதப்படுகிறதாம்.. பாவம் ரஹ்மான்.. அவருக்கு இந்த அரசியலெல்லாம் தெரியுமா என்ன..? ரஹ்மானோ பல்வேறு கல்லூரிகள், அமைப்புகள் அழைத்த பாராட்டு விழா அழைப்புகளையெல்லாம் தவிர்த்துவிட்டு, தினமும் ஒவ்வொரு ஊருக்கு நேர்த்திக் கடன் என்று சொல்லித் தப்பித்து ஓடிக் கொண்டிருக்கிறார்."உச்ச நடிகர்களும், பிரபலங்களும் ரஹ்மானின் வீடு தேடிப் போய் வாழ்த்தியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு போனிலேயே பாதிப் பேர் வாழ்த்துச் சொல்லி அவரை அவமானப்படுத்திவிட்டார்கள்.. இந்நேரம் கமலஹாசனுக்கு இந்த விருது கிடைத்திருந்தால் இப்படி விட்டிருப்பார்களா..?" என்று இசைக் கலைஞர் ஒருவர் வடபழனியில் ‘சங்கத்து வாசலில் நின்று கத்திக் கொண்டிருக்கிறார்.இதையெல்லாம் கேக்குறதுக்கு யாருக்கு இங்க நேரமிருக்கு..?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment